தமிழகத்தை போல கேரள கோயில்களில் தோல் கருவியான செண்டை மேளம், காற்று வாத்தியமான கொம்பு குழல் வாத்தியங்கள் இசைக்கப்படுவது பாரம்பரியம். செண்டை மேள கலைஞர்கள் ஒரே இடத்தில் கூடி இசைக்கருவிகளை இசைப்பதை ரசிக்க பல மாநில மக்கள் அங்கே கூடுவர்.
செண்டை மேளங்கள் அதிர்வு இசை அனைவரின் கவனத்தையும் கவரும் வகையில் இருக்கும். தமிழ்நாட்டில் தவில் நாதஸ்வரம் எப்படி பிரபலமோ அதுபோல அங்கே செண்டை மேள வாத்தியங்கள் பிரபலம்.
இந்நிலையில் செண்டை மேளத்தை பெண் ஒருவர் வாசித்த காட்சியானது இணையத்தில் வெளியாகி உல்ளது. பார்ப்பவர்களை பிரமிக்கவைக்கும் அந்த பெனின் வாசிப்பு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது…